Loading Now

பவள விழாக் கட்​சி​யில் சின்னவர் சிடுசிடுப்பு | உள்குத்து உளவாளி

பவள விழாக் கட்​சி​யில் சின்​னவருக்​கும், வந்த சாருக்​கும் விரிசல் பெரி​தாகிக் கொண்டே போகிற​தாம். விசில் பார்ட்​டி​யின் வளர்ந்த மாண்​புமிகு, பேர​வை​யில் தலை​மைக் குடும்​பத்தை வம்புக்கு இழுத்து வைரலாகிக் கொண்டே இருக்​கிறார்.

ஆனால், அவருடன் சார் தரப்​பினர் இன்​ன​மும் நெருக்​க​மாக இருக்​கிறார்​களாம். ஏற்கெனவே இது விஷய​மாக மாமனுக்​கும், மச்​சானுக்​கும் மனத்​தாங்​கல் வந்​த​போது குடும்ப உறுப்​பினர்​கள் தலை​யிட்டு சமா​தானம் செய்​தார்​களாம். இந்த நிலை​யில், மீண்​டும் இப்​போது இந்த விவ​காரத்​தில் சின்​னவர் சிடுசிடுக்​கிறா​ராம்.

ஆனால், “நமக்கு தொழில் துறை​களும் இருக்​கு. முக்​கிய​மான சில விஷ​யங்​களை சிக்​கலின்றி கொண்டு செல்ல வேண்​டு​மானால் இப்​படித்​தான் இருந்​தாக வேண்​டும்” என்று சொன்ன சார், அரண்​மனைக் கோழிகளுக்கு வேண்​டப்​பட்ட அக்கட தேசத்து ஆட்​களு​டன் மச்​சானுக்கு இருக்​கும் நெருக்​கத்தை கோடிட்​டுக் காட்​டி, “அப்​படித்​தான் இது​வும்” என்று நியா​யம்​ கற்​பித்​தா​ராம்​.

Share this content:

You May Have Missed