Loading Now
×

சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு நியமன மன்ற உறுப்பினர் ஆணை வழங்கல்

image-1 சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு நியமன மன்ற உறுப்பினர் ஆணை வழங்கல்

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான நியமன மன்ற உறுப்​பினர்​களாக தேர்வு செய்​யப்​பட்ட பா.ஜான்சி உமா மற்​றும் பா.​பாலாஜி ஆகியோ​ருக்கு மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் உறுப்​பினர் ஆணையை வழங்​கி​னார்.

கடந்த ஏப்​ரல் மாதம் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரில், தமிழக நகர்ப்​புறம் மற்​றும் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் வழங்க வகை செய்​யும் சட்ட மசோ​தாக்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தாக்​கல் செய்​தார்

அதைத் தொடர்ந்​து, மாற்​றுத் திற​னாளி​களை ஊராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சி, ஒன்​றி​யம் மற்​றும் மாவட்ட ஊராட்​சிகளில் நியமன மன்ற உறுப்​பினர்​களாக நியமிக்க தமிழக அரசு உத்​தர​விட்டு அரசாணை வெளி​யிட்​டது.

அதன்​படி, இந்த சட்​டத்​தின் மூலம் தமிழகத்​தில் மொத்​தம் 13,988 மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் வாய்ப்பு கிடைக்​கும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த உறுப்​பினர்​கள் தேர்​தலில் போட்​டி​யி​டா​மல், நியமனம் மூலம் பதவி​களுக்கு தேர்வு செய்​யப்​படு​வார்​கள்.

அதனடிப்​படை​யில், சென்னை மாநக​ராட்சி மாமன்​றத்​திற்கு நியமன மாற்​றுத் திற​னாளி உறுப்​பினர்​களாக பா.ஜான்சி உமா மற்​றும் பா.​பாலாஜி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கு, நியமன உறுப்​பினர்​களுக்​கான ஆணையை சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன்​ நேற்​று வழங்​கி​னார்​.

Share this content:

Previous post

17 கவுன்சிலர்கள் ராஜினாமா..! கம்பம் நகராட்சியில் பரபரப்பு

Next post

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவிற்கு பிறந்தநாள் வாழ்த்து – திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரிசளிப்பு

2 comments

comments user
Ramu

Reporter sir

    dhina kani
    S.V.KANIRAJA

    வணக்கம் ராம் சார்,

    தின கனி காலை நாளிதழில் ரிப்போர்ட்டர் பணிக்கு நீங்கள் விசாரித்திருந்தீர்கள்.

    தங்களுக்கு பத்திரிகைத் துறையில் உள்ள அனுபவம், பணிபுரிந்த ஊடகங்கள் மற்றும் தற்போதைய விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

    தயவுசெய்து 94436 99066 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு உங்கள் விவரங்களை தெரிவிக்கவும்.

    நன்றி.

    தின கனி காலை நாளிதழ்

You May Have Missed