மழை வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ
கும்மிடிப்பூண்டி,அக்.21. கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்த நிலையில்மழை வெள்ளம் தேங்கிய பகுதி்களில் மழை வெள்ளத்தை அகற்றவும்,மழை நீர் வடிகால் பணிகளையும் புதன்கிழமை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் தீவிரப்படுத்தினார். கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இது குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து புதன்கிழமை கவரப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டஎம்எல்ஏ எஸ்.விஜயகுமார் கவரப்பேட்டை…
டி.ஜெ.எஸ் மெட்டிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவர் சேர்க்கை
கும்மிடிப்பூண்டி,அக்.21. கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி புதிய மாணவர்களின் சேர்க்கையான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பா.ஞானபிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பள்ளியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரவர்…