Loading Now
உலக சுற்றுச்சூழல் தினம்: திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி

உலக சுற்றுச்சூழல் தினம்: திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி

திருவாரூர், ஜுன்.05
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரங்கள் வளர்ப்பதின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், நீர் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தூய்மையான பசுமை சூழலை உருவாக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.மேலும், பல்வேறு பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி, ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this content:

You May Have Missed