Loading Now
இலவச போட்டி தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய 102வயது முன்னாள் ஐஏஎஸ்

இலவச போட்டி தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய 102வயது முன்னாள் ஐஏஎஸ்

1003113495-1-150x150 இலவச போட்டி தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய 102வயது முன்னாள் ஐஏஎஸ்
 
கும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையம் மற்றும் ஜீவிதா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திவரும் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில்  மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்வில் 102  வயதான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி  லட்சுமிகாந்தன் பாரதி பங்கேற்று  மாணவர்களுக்கு  ஆலோசனை வழங்கினார்.
 
கும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையம் மற்றும் ஜீவிதா ஐஏஎஸ் அகாடமி இணைந்து இலவச
டிஎன்பிஎஸ்சி மையத்தை
நடத்தி வருகின்றனர். இந்த 
நிலையில் பயிற்சி மைய மாணவ மாணவிகளுக்கு அரசு போட்டி பயிற்சி பயிற்சி, தேர்வு வழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்வு காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், ஜீவிதா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக 102 வயதான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி  லட்சுமிகாந்தன் பாரதி பங்கேற்று மாணவர்கள் முன்
பேசும் போது, இக்கால 
இளைஞர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், எதிர்கால இலக்கை நிர்ணயித்து  அதனை அடைய கடுமையாக உழைப்பவர்
களாகவும் இருக்க வேண்டும். தோல்வியை கண்டு முயற்சியை கைவிடாமல் விடாமுயற்சியுடன் போட்டிகளை அணுக 
வேண்டும் என்றார்.
 
தொடர்ந்து பேசியவர், அரசு 
பணிகளுக்கு தயாராகுபவர்கள்,
தேர்வில் வென்று  அரசு பணியை பெறும் வரை தங்கள்  கவனத்தை படிப்பதிலேயே செலுத்த வேண்டும் என்றவர், அரசு பணிக்கு தேர்வானதும்
நேர்மையாகவும், ஏழை எளியோருக்கு உதவும் மனதுடன்  பணியாற்ற வேண்டும் என்றவர். இது போன்ற நிகழ்வில் இளைஞர்களை சந்திப்பது பெரு மகிழ்ச்சியாக  உள்ளது என்றவர் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
 
மேலும் விழாவில் போட்டி தேர்வில் வென்று சென்னை உயர்நீதி மன்றதத்தில் அலுவலக
உதவியாளர் ஆக பணி ஆணை பெற்ற ஆர்.அஸ்ரா அகமத்
 என்பவரை வாழத்தி, காந்தி  உலக மையம் மற்றும் ஜீவிதா ஐஏஎஸ் அகாடமி சார்பில் நினைவு  பரிசளித்தார்.
 
அவ்வாறே இந்த நிகழ்வில் மாணவர்கள் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பயிற்சி பெற உதவும்
புரவலர்களான ரெட்டம்பேடு 
ஊராட்சி முன்னாள் தலைவர் முரளி, தொழலதிபர் முனிராஜ்,  ராஜராஜன், எஸ.டி.கே.சங்கர், 
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  க.ஏ.சங்கர், பேரூராட்சி
கவுன்சிலர் கருணாகரன், 
அதிமுக ஒன்றிய செயலாளர் 
எஸ்.எம்.ஸ்ரீதர் உள்ளிட்டோர்களை ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதிகெளரவித்தார். 
 
விழா முடிவில் ஜீவிதா ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த ரகு நன்றி கூறினார்.

Share this content:

You May Have Missed