Loading Now
கொடைக்கானல் மலைப்பகுதியில் கனிமவளங்கள் அழிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் கனிமவளங்கள் அழிப்பு

வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் பாறைகள் உடைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், கனிமவளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில், பெரிய அளவிலான பாறைகளை தடைசெய்யப்பட்ட பாறை உடைக்கும் வாகனத்தை பயன்படுத்தி துளைபோட்டு சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி உடைக்கப்பட்டு, அவற்றை அப்பகுதியிலேயே மலைபோல் குவித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படுவதுடன், மலைப்பகுதியின் நிலத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதி அதன் இயற்கை எழில், வனப்பகுதிகள், நீராதா ரங்கள் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்த கைய சூழலில் அனுமதியின்றி பாறைகள் உடைக்கப்பட்டு கனிமவளங்கள் அகற்றப்பட்டால், மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, மழைக்காலங்களில் மண் சரிவு உள்ளிட்ட பிரச்சினை களும் ஏற்பட வாய்ப்புள் ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், பாறைகளை உடைப்பதற்காக சக்திவாய்ந்த வெடிபொ ருட்கள் பயன்படுத்தப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் அதிர்வுகள் அருகிலுள்ள குடியிருப்புகளில் உணரப் படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின் றனர். இதனால் வீடுகளின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பவர்களுக்கு சில வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவதாகவும், புகார்கள் மற்றும் எச்சரிக்கைகள் இருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொடைக்கானல் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள் ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சி நகர் பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டுள்ள இடத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதற்கான அனுமதி, பட்டா நிலம் மற்றும் கனிமவளப் பிரித்தெடுப்புக்கான உரிய அரசு அனுமதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தொடர்ந்து கனிமவளங் கள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக் கானல் மலைப்பகுதியின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்துமா? பாறைகள் உடைக்கப்படுவதற்கான அனுமதிகள் குறித்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படுமா? என்பதே தற்போது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

Share this content:

You May Have Missed