Loading Now
கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்

கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்

1003109036-3-150x150 கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்1003107452-150x150 கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் உள்ல 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது மண்ணில் இருந்து 5 சிலைகள் கிடைத்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சிதிலமடைந்த கோவிலின் ஒரு பகுதியில் சுவாமி சிலைகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த பலராமன் என்பவர் பூஜை நடத்தி கோவிலை பராமரித்து வந்தார்.
 
இந்த நிலையில், அப்பகுதி் மக்கள் அங்கு புதிதாக அக்னீஸ்வரர் கோவிலை கட்டும் பணியை துவங்கினர். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது, அங்கு வித்தியாசமாக சத்தம் வருவதை கண்ட கோவிலை பராமரிக்கும் பரந்தாமன் என்பவரின் மகன் திரு அந்த இடத்தில் பார்த்த போது, அங்கு 5சிலைகள் இருப்பதை கண்டு
அதிர்ந்தார்.
 
தொடர்ந்து இந்த தகவல் அப்பகுதியில் பரவி பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த நிலையில் திரு சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அபிராஜிற்கு தகவல் தந்தார். தொடர்ந்து வட்டாட்சியர் பாலாஜி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசெல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அபிராஜ் சம்பவ இடம் விரைந்து மண்ணில் கிடைத்த சிலைகளை 
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
 
பின் அங்கு சுவாமி சிலைகளை ஆய்வு செய்த வட்டாட்சியர் பாலாஜி சுவாமி சிலைகளுக்கு சீல் வைத்து, தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு சிலைகளின் விபரம் குறித்து 
முழுமையாக தெரியவரும் என்றார். இந்நிலையில் மேற்கண்ட சுவாமி சிலைகளில் இரண்டு அம்மன் சிலைகயாகவும், ஒன்று நடராஜர் சிலையாகவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 

Share this content:

You May Have Missed