Loading Now
வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் சீரமைப்பு… சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் சீரமைப்பு… சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை, செப். 25
தமிழ்நாடு முதல்-அமைச்சர், சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சேதமடைந்த 160 கி.மீ. நீளத்திலான 780 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தட சாலைகளும், 5,653.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், சாலைகள் மேம்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல் மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மாநகராட்சியின் பேருந்து தட சாலைகள் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.2026-27ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 360 கி.மீ நீளமுடைய பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.திட்ட அறிக்கைஅதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கி.மீ நீளத்திலான 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழ்நாடு அரசிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) மூலமாக விரிவான திட்ட அறிக்கைகளின் மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பங்கள் கோரப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.

Share this content:

You May Have Missed