கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் உள்ல 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது மண்ணில் இருந்து 5 சிலைகள் கிடைத்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சிதிலமடைந்த கோவிலின் ஒரு பகுதியில் சுவாமி சிலைகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த பலராமன் என்பவர் பூஜை நடத்தி கோவிலை பராமரித்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதி் மக்கள் அங்கு புதிதாக அக்னீஸ்வரர் கோவிலை கட்டும் பணியை துவங்கினர். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது, அங்கு வித்தியாசமாக சத்தம் வருவதை கண்ட கோவிலை பராமரிக்கும் பரந்தாமன் என்பவரின் மகன் திரு அந்த இடத்தில் பார்த்த போது, அங்கு 5சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ந்தார். தொடர்ந்து இந்த தகவல் அப்பகுதியில் பரவி பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த நிலையில் திரு சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அபிராஜிற்கு தகவல் தந்தார். தொடர்ந்து வட்டாட்சியர் பாலாஜி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசெல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அபிராஜ் சம்பவ இடம் விரைந்து மண்ணில் கிடைத்த சிலைகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின் அங்கு சுவாமி சிலைகளை ஆய்வு செய்த வட்டாட்சியர் பாலாஜி சுவாமி சிலைகளுக்கு சீல் வைத்து, தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு சிலைகளின் விபரம் குறித்து முழுமையாக தெரியவரும் என்றார். இந்நிலையில் மேற்கண்ட சுவாமி சிலைகளில் இரண்டு அம்மன் சிலைகயாகவும், ஒன்று நடராஜர் சிலையாகவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. …
இலவச போட்டி தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய 102வயது முன்னாள் ஐஏஎஸ்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் 102 வயதான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி…
கோவை விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்!
கோவை, செப். 25கோவை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களை 3 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் ரூ.500…
வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் சீரமைப்பு… சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சென்னை, செப். 25தமிழ்நாடு முதல்-அமைச்சர், சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சேதமடைந்த…
போக்சோ வழக்கு: சிறுமியின் புகைப்படம் பகிர தடை – சென்னை காவல்துறை
சென்னை, செப். 25போக்சோ வழக்கில் சிறுமி ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொளி பகிரப்படுவது சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும்…
காதலிக்குமாறு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி – அண்ணன், தம்பி கைது
சென்னை, செப். 25காதலிக்குமாறு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை அடுத்த…
“HOUSE WIFE” இருக்க முடியும் என்றால் “HOUSE HUSBAND”களும் இருக்க முடியும்..! – மதுரை ஐகோர்ட்டு
மதுரை, செப். 25“HOUSE WIFE” இருக்க முடியும் என்றால்.. "HOUSE HUSBAND"களும் இருக்க முடியும் என்று ஐகோர்ட்டு மதுரைக் கிளை…
திண்டுக்கல்: பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், செப். 25திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையம் சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார்…
காஞ்சிபுரத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அமைச்சர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் திருமதி சினேகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், நாட்டு நலப்பணிகள் திட்ட நாளை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள்…
நீந்தும் சுறாக்களுக்கு மத்தியில்.. காதலியிடம் திருமண புரபோஸ் செய்த வாலிபர்
லண்டன், செப். 25இங்கிலாந்து நாட்டில் சுறா மீன்கள் மீது அலாதி பிரியம் கொண்ட தன் காதலிக்கு, சுறாக்கள் நடமாடும் நீர்த்…