EVP சந்தோஷ் ரெட்டி வழக்கில் திடீர் திருப்பம்

EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், EVP தரப்பு வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அப்பெண் சந்தோஷ் ரெட்டி மீது பொய் வழக்கு பதிந்திருப்பது அம்பலமாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ள EVP ஃபிலிம் சிட்டியில் பல்வேறு மொழிப் படப்பிடிப்புகளும், தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. தனக்கென தனி ஒரு அடையாளத்தை EVP ஃபிலிம் சிட்டி தக்கவைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் பார்வதி என்பவர் பெங்களூர் வயாலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் பூதாகரமான நிலையில், EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் தரப்பு திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பார்வதி புகார் அளிப்பதற்கு முன்பே பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி, பார்வதி மீது பண மோசடி புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த புகாரில், குடும்ப நண்பரைப் போல அறிமுகமான பார்வதி, லாவகமாக 32 லட்சத்திற்கும் அதிமான தொகையை மோசடி செய்ததாகவும், இது போலவே பல்வேறு நபர்களிடம் மோசடி செய்திருப்பதாகவும் கூறப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களும் காவல் நிலையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட பார்வதி அவரது கணவர் பார்த்திபன் மற்றும் நண்பர் நித்திஷ் ஆகியோர் மீது குற்றவியல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்ளை வலை வீசி தேடி வருகின்றனர்…



Post Comment