Loading Now
காஞ்சிபுரத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அமைச்சர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் திருமதி சினேகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அமைச்சர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் திருமதி சினேகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், நாட்டு நலப்பணிகள் திட்ட நாளை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் மாபெரும் பணி இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு, மத்திய பாதுகாப்புப் படையினர், மாநில நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, எக்ஸ்னோரா, NDSO உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து வருகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் மாவட்ட ஆட்சியர் திருமதி சினேகா கலந்து கொண்டு, பனை விதையை நட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் மாபெரும் பணியை தொடங்கி வைத்தார்…
நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனை விதைகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த மாபெரும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
ஒரு கோடி பனை விதைகள் நடும் இந்தப் பணியின் மூலம், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this content:

You May Have Missed