Loading Now
×

2015 முதல் நான் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறேன் – ஷமி ஓபன் டாக்

இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்காக 2015-ம் ஆண்டு முதலே தான் ஒரே ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கும் டெஸ்ட் தோல்விகளைக் கண்டது பகுதியளவில் முகமது ஷமி இல்லாததால்தான். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் கர்ஜனையுடன் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்த வேகப்பந்து சிங்கம். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஷமி, “5-6 கிலோ அல்ல, 9 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். பெரிய சவால் தான். நமக்கு நாமே சவால் ஏற்படுத்திக் கொள்வது மிகக் கடினம். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது என் உடல் எடை கிட்டத்தட்ட 90 கிலோ இருந்தது. ஆரோக்கியமற்ற உணவை உண்பதற்கான ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இனிப்புகள் சாப்பிட மாட்டேன். 2015 முதல் நான் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன்.

Share this content:

Previous post

விராட் கோலி ஃபார்மை மீட்டெடுக்க திணறுவது ஏன்? – இது அனில் கும்ப்ளே பார்வை

Next post

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் ” பணியிடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு ” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

You May Have Missed