Loading Now

வேப்பூரில்வேப்பூரில் விடியல் பயணம்’ பட இசை வெளியீட்டு விழா.

IMG-20251217-WA0015-1024x459 வேப்பூரில்வேப்பூரில் விடியல் பயணம்’ பட இசை வெளியீட்டு விழா.

புதுமுகம் நடித்துள்ள விடியல் பயணம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 16-ம் தேதி விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர். ராதாகிருஷ்ணன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தாளாளர் சி.வெ.க. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். திரைப்படத்தின் இயக்குனர் குமார் வரவேற்புரையாற்றினார். விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீர.திராவிட மணி, கடலூர் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர் சவுதி ராஜ்குமார், திமுக மருத்துவரணி, வேப்பூர் பிரைடு லயன்ஸ் கிளப் பொருளாளர் டாக்டர் ஏ. ஆர்.தங்கதுரை, தொழிலதிபர் முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். விடியல் பயணம்` சிறந்த பாடலில் தொடங்கி திரைப்படத்தில் ’அழகான’ பாடல் வரை பல பாடல்கள் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.விடியல் பயணம் ‘சமத்துவம் சமூக நீதி’ என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கதிர் குரல் ஆசிரியரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வா.க.சிவகுமார், சின்னராசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

Share this content:

You May Have Missed