Loading Now

பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

WhatsApp-Image-2025-11-02-at-2.09.13-PM-1024x768 பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழின போராளி, அறிவுக் கடல் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் ஆணைப்படி, நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை) திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்டம் நெருப்பெரிச்சல் கொங்கு கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கவின் ஜிம் வி. ஜெயமுருகன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையேற்றார்.

WhatsApp-Image-2025-11-02-at-2.09.13-PM-1-1024x768 பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை ஆ. தங்கவேல் பாண்டியன் (மாநில துணைத் தலைவர்), விருதானியம் கே.பி.ஆர். பன்னீர்செல்வம் (வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அவிநாசி தலைவர் சரவணன் (மாநில செயற்குழு உறுப்பினர்), திரு பெரியார் (மாநில செயற்குழு உறுப்பினர்), ஜெய்சங்கர் (மகளிர் அணி செயலாளர்), நாகலட்சுமி (பொருளாளர்), அழகுசெல்வி (மகளிர் அணி பாரதி), பரத் (மாணவரணி செயலாளர்), விஜயகுமார் (தலைவர்), வி.எஸ். கோவிந்தராஜ் (தெற்கு மாவட்ட தலைவர்), மணி கண்ணன் (செயலாளர்), ரங்கநாதன் (கிழக்கு மாவட்ட தலைவர்), பிரபு (செயலாளர்), பழனிசாமி (மேற்கு மாவட்ட தலைவர்), வெங்கடாசலம் (செயலாளர்), வன்னியர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், மற்றும் தலைவர் கோ. கண்ணன் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp-Image-2025-11-02-at-2.09.12-PM-1024x768 பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்குதல், டிசம்பரில் நடைபெறவுள்ள 10 புள்ளி – 5 வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம், மேலும் திருப்பூரில் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களை அழைத்து பொதுக்குழு நடத்துதல் ஆகிய முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Share this content:

Previous post

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

Next post

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சங்கத் தேர்தல் முடிவுகள்

Post Comment

You May Have Missed