Loading Now

கோவில்பட்டி அண்ணாமலை நகரில் AITUC ஆட்டோ ஸ்டாண்ட் நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு

கோவில்பட்டி அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் AITUC ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தோழர் பாபு அவர்கள் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கோவில் பட்டி நகர செயலாளர் தோழர் செந்தில் ஆனந்த், AITUC ஆட்டோ தொழில் சங்க வட்டார தலைவர் ராஜேஸ்குமார், செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.ஆட்டோ பணியாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூடுகை, தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது.மேலும், வரும் நாட்களில் ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினைகளை தீர்க்க AITUC தொடர்ந்து செயற்படும் என தலைவர்கள் உறுதியளித்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed