Loading Now

சென்ட்ரல்​ ரயில்​ நிலையம்​ அருகே 2 கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: காவல்​ ஆணையர்​ எச்சரிக்கை

சென்​னை: சென்ட்ரல்​ ர​யில்​ நிலையம்​ அருகே பச்​சையப்​பன்​ கல்​லூரி மற்​றும்​ ​மாநிலக்​ கல்​லூரி ​மாணவர்​கள்​ மோ​திக்​கொண்​டனர்​. இந்​த ​விவ​காரத்​தை அடுத்​து தக​ராறில்​ ஈடுபடும்​ ​மாணவர்​கள்​ மீது ​பாரபட்​சம்​ இன்​றி நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என ​காவல்​ ஆணையர்​ அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்​.

சென்​ட்​ரல்​ ர​யில்​ நிலையம்​ அருகே உள்​ள ஆட்​டோ ஸ்​டாண்​டில்​ நேற்​று ​முன்​தினம்​ ​மாலை பச்​சையப்​பன்​ கல்​லூரியை சேர்​ந்​த சு​மார்​ 20 ​மாணவர்​கள்​ நின்​று பேசிக்​கொண்​டிருந்​தனர்​. அப்​போது அந்​த வழி​யாக ​மாநிலக்​ கல்​லூரியை சேர்​ந்​த சு​மார்​ 20 ​மாணவர்​கள்​ வந்​தனர்​.

பச்​சையப்​பன்​ கல்​லூரி ​மாணவர்​களை ​பார்​த்​ததும்​, அருகில்​ கிடந்​த கற்​களை எடுத்​து அவர்​கள்​ மீது வீசித்​ ​தாக்​கி​யுள்​ளனர்​. ப​திலுக்​கு பச்​சையப்​பன்​ கல்​லூரி ​மாணவர்​களும்​ ப​திலுக்​கு கற்​களை வீசித்​ ​தாக்​குதல்​ நடத்​தினர்​.

கற்​கள்​ வீசப்​பட்​ட​தில்​ அவ்​வழி​யாகச்​ சென்​ற ​மாநகரப்​ பேருந்​தின்​ கண்​ணாடி சேதமடைந்​தது. இத​னால்​ அப்​பகு​தி​யில்​ சிறிது நேரம்​ பதற்​ற​மான சூழல்​ நில​வியது.

இதுபற்​றி பொதுமக்​கள்​ ​போலீஸாருக்​கு தகவல்​ தெரி​வித்​தனர்​. பெரியமேடு ​போலீஸார்​ சம்​பவ இடத்​துக்​கு ​விரைந்​தனர்​. ​போலீஸாரை ​பார்​த்​ததும்​ மோதலில்​ ஈடுபட்​ட ​மாணவர்​கள்​ அங்​கிருந்​து தப்​பி ஓடினர்​. ​

போலீஸார்​ அவர்​களை ​விரட்​டிய​தில்​, ​திருவள்​ளூரை சேர்​ந்​த பச்​சையப்​பன்​ கல்​லூரி ​மாணவர்​ ஒருவர்​ மட்​டும்​ பிடிபட்​டார்​. அவரை ​காவல்​ நிலையம்​ அழைத்​துச்​ சென்​று தொடர்​ந்​து ​வி​சாரித்​து வருகின்​றனர்​.

மேலும்​ தப்​பி ஓடிய ​மாணவர்​களை அடை​யாளம்​ கண்​டு, அவர்​கள்​ மீது சட்​டப்​படி நடவடிக்​கை எடுக்​கும்​ பணி​யும்​ தொடர்​ந்​து நடைபெற்​று வருகிறது.

இந்​நிலை​யில்​, ​மாணவர்​கள்​ மோதலில்​ ஈடுபடுவதைத்​ த​விர்​க்​க வேண்​டும்​ என்​றும்​, பொதுமக்​களுக்​கு இடையூறு ஏற்​படுத்​தும்​ வகை​யில்​ செயல்​படுபவர்​கள்​ மீது ​பாரபட்​சம்​ இன்​றி கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என சென்​னை ​காவல்​ ஆணையர்​ அமல்​ராஜ் எச்சரித்துள்ளார்.

Share this content:

Previous post

அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை: என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தகவல்

Next post

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி – ஒரு மாத சேவை இயக்கத்துக்கு பாஜக ஏற்பாடு

You May Have Missed