சிறுமிக்கு பாலியல் தொல்லை: 15வயது சிறுவன் கைது
சென்னையில், கொடுங்கையூரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 15 வயது சிறுவனை எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த சிறுவனை நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கடந்த 16ம் தேதி மாலை டியூஷன் செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.



Post Comment