வடசென்னையில் 50 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவித்தொகை
சென்னை, வடசென்னையில் இஸ்லாமிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராயபுரம் ஸ்ரீ பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையுடன் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் மருத்துவருமான சுபேர் கான், அல் ஹிதாயா கல்வி அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா முனீர், மலர் ஃபேமிலி ஸ்டோர் உரிமையாளர் ஹாஜி. ஃபாரூக் அலி, புதுமனை ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அனிபா மற்றும் பள்ளிவாசல் இமாம் மௌலவி மௌலானா முஹம்மது முஹசன் ஹஸ்ரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அப்ரோஸ், பொருளாளர் அஸ்கர் கான், செயலாளர் ஹசன், நிர்வாகிகள் ஜாபர் சித்திக், அபூபக்கர், முகம்மது அப்ரோஸ், சுலைமான் கான் மற்றும் முகம்மது யக்கிம் ஆகியோர் செய்திருந்தனர்.
மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக இஸ்லாமிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Post Comment