Loading Now

தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் நடைபெற்ற முகாமில், வடக்கு வட்டார துணை ஆணையர் சுவேதா சுமன், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தலைவர் சிவா, மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தெருநாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்துவதற்காக 10 வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் 2 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மொபைல் செயலியில் விவரங்களை பதிவு செய்ய ஒருவர் என பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழுவினர் தலா 50 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

Share this content:

You May Have Missed