Loading Now

யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் பாகுபலி யானை காயம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்​டார பகு​தி​களில், கடந்த 4 ஆண்​டு​களுக்கு மேலாக ‘பாகுபலி’ என அழைக்​கப்​படும் ஒற்றை ஆண் யானை சுற்​றித் திரி​கிறது.

சில நாட்​களுக்கு முன்பு பிற யானை​களு​டன் நடந்த மோதலில், பாகுபலி யானையின் வால் பகு​தி​யில் குத்​தப்​பட்டு காயம் ஏற்​பட்​டுள்​ளது. இதனை தொடர்ந்​து, வனத்​துறை​யினர் யானையை கண்​காணித்து வரு​கின்​ற​னர். உரிய சிகிச்சை அளிக்க முயற்சி மேற்​கொண்​டுள்​ளனர்.

பெரிய​நாயக்​கன்​பாளை​யம் வனச்​சரத்​துக்கு உட்​பட்ட கதிர்​நாயக்​கன்​பாளை​யம் லட்​சுமிநகரில் சுற்​றித்​திரிந்த மற்​றொரு காட்டு யானை அப்​பகு​தி​யில் வட மாநிலத் தொழி​லா​ளர்​கள் தங்​கி​யிருந்த தகரக் கொட்​டகை பகு​திக்கு சென்​றது.

இதனை பார்த்த தொழி​லா​ளர்​கள் தகரக்​கொட்​டகையை விட்டு வெளி​யேறினர். வனத்​துறை​யினர் வந்து யானையை காட்​டுக்​குள் விரட்​டினர். வனத்​துறை​யினர் கூறும்​போது, “கதிர்​நாயக்​கன்​பாளை​யம் சுற்​று​வட்​டார பகு​தி​களான மணிநகர், கணப​திநகர், கணபதி கார்​டன், போஸ்​டல் காலனி, ஆர்​.​வி.நகர், பூச்​சி​யூர், வெற்​றிவேலவா நகர், ரேணு​காபுரம் மற்​றும் லட்​சுமிநகர் பகு​தி​களில் ஒற்றை யானை​யின் நடமாட்​டம் வரும் நாட்​களில் இருக்க வாய்ப்​பிருக்​கும் என்​ப​தால், இரவு நேரங்​களில் கூடு​தல் கவனத்​துடன் பொது​மக்​கள் இருக்​க வேண்​டும்” என்​ற​னர்​.

Share this content:

Previous post

தாராபுரம் தொகுதியில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்

Next post

“தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது” – ஜெகத்ரட்சகன் எம்.பி பிரச்சாரம்

You May Have Missed