தண்ணீர் பாட்டில் வீசி தாக்கிய கொழுந்தன் மீது பெண் மருத்துவர் புகார் – வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில், கணவர் வீட்டில் இல்லாதபோது தன்னிடம் தவறாகப் பேசி, தண்ணீர் பாட்டிலால் தாக்கி, வீடியோ எடுத்ததாக தனது கொழுந்தன் மீது பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வசித்து வரும் 35 வயது பெண் மருத்துவர். பிரபல டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் முத்த மருமகள். இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர், வேப்பேரி காவல் நிலையத்தில் தனது கொழுந்தன் அனீஸ் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், “கடந்த மே மாதம் 9-ம் தேதி மதியம் சுமார் 2:30 மணியளவில், எனது கணவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது, வீட்டிலிருந்த எனது கொழுந்தன் அனீஸ் என்னிடம் தவறான வார்த்தைகளில் பேசினார். நான் அவரைக் கண்டித்துப் பேசியதால் ஆத்திரமடைந்த அவர், ‘உனக்கு என்ன இவ்வளவு திமிறா? நீ அடங்கமாட்டியா?’ என்று கூறி, கையிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்து விட்டார் என் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான் வலியால் அழுதுகொண்டே எனது கணவருக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்க முயன்றபோது, அனீஸ் தவறான நோக்கத்துடன் என்னை வீடியோ எடுத்தார். அவர் தொடர்ந்து எனக்குத் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Post Comment