Loading Now

டி.ஜெ.எஸ் மெட்டிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவர் சேர்க்கை

கும்மிடிப்பூண்டி,அக்.21. கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி புதிய மாணவர்களின் சேர்க்கையான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பா.ஞானபிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
தொடர்ந்து பள்ளியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் புதிதாக  பள்ளியில் சேர்ந்த  மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரவர் பெற்றோர் மடியில்  அமரவைக்கப்பட்டு, அரிசியில் அவர்களது கையை  பிடித்து தமிழக  உயிரெழுத்தை  எழுதி, வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டது.
 
தொடர்ந்து புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னாள்  எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புத்தக பை, புத்தகங்களை வழங்கி, மலர் தூவி குழந்தைகளை வாழ்த்தினார். 
 
இதன் பின்னர் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி நன்றியுரை வழங்கினார்.
 

Share this content:

Post Comment

You May Have Missed