Loading Now

ஊத்துக்குளியில் துளிர் வினாடி வினா போட்டி – மாணவர்களின் உற்சாக பங்கேற்பு

திருப்பூர், ஊத்துக்குளி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பில் இன்று மாணவ–மாணவிகளுக்கான “துளிர் வினாடி வினா போட்டி” வட்டார அளவில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் வானவில் மன்ற கருத்தாளர் திருமதி ரம்யா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, அறிவியல் இயக்கம் துளிர் இதழ் குறித்து கிளை ஒருங்கிணைப்பாளர், பட்டதாரி ஆசிரியர் திருமதி சி.செல்வி அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

ஊத்துக்குளி கிளைத் தலைவர் மற்றும் சுண்டைக்காம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. காளியப்பன் அவர்கள் “எதிர்கால சமுதாயம் மாணவர்களே” என்ற கருத்தை விளக்கி மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். மேலும், குன்னத்தூர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. லோகேஷ் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed