உ.பியில்கொடூரம் : வரதட்சணைகொடுமையால் 2வதுமாடியில்குதித்தஇளம்பெண் – அதிர்ச்சியில்மக்கள்!
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா மரணச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஷார்ஜாவில் 2 இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த சம்பவம் பேசப்பட்ட நிலையில், இப்போது உத்தரபிரதேசத்தில் அர்ச்சனா என்ற இளம்பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலிகார் மாவட்ட டான்கோலி கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா, 6 வருடங்களுக்கு முன்பு சோனுவை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு மாமியார் நேஹ்னி தேவி, கணவர் சோனு, மாமனார் பிரேம்பால் மற்றும் மைத்துனர்கள் பிரமோத், துர்கேஷ் ஆகியோர் இணைந்து, 5 லட்சம் ரூபாயும் மோட்டார் பைக்கையும் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதன் உச்சத்தில், மாமியார் 2வது மாடியில் இருந்து குதிக்கும்படி மிரட்டியதும், கணவரும் “குதி” என சொல்லியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பிழைக்க என்ன செய்வது என தெரியாமல் அர்ச்சனா குதித்துள்ளார். காயங்களால் தவித்த அவரை பார்த்தும், கணவர் இரக்கமின்றி தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது. வீடியோவில் அர்ச்சனாவின் குழந்தைகள் கதறி அழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
உடலெங்கும் காயங்களுடன் அர்ச்சனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூகத்தில் கடும் எதிர்ப்பை தூண்டியுள்ளது. பொதுமக்கள் “வரதட்சணை எதிர்ப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.



Post Comment