Loading Now
×

அண்ணனின் வேலையை பறிக்க செட்டப் வீடியோ எடுத்த கில்லாடி தம்பி!

அண்ணன், அக்கா மற்றும் தங்கைக்கு சொத்தை கொடுக்காமல் நிலத்தை அபரிக்கும் நாடகம் அம்பலம்?

வடிவேல் ஒரு படத்தில் இரு சக்கரம் வாகனம் முன்பு விழுந்து ஒருவரிடம் நகை மற்றும் பணம் பறிப்பது போல் காமெடியை பார்த்துள்ளோம்.

அதேபோல் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை அபகரிக்க அண்ணன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மீது ஓடி சென்று டிராக்டர் மீது ஏறி தனது மகனின் மூலம் வீடியோ எடுக்க சொல்லி தன்னை கொலை செய்வதாக நாடகமாடியது அம்பலமானது.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் பட்டு பகுதி சேர்ந்தவர் வடிவேலன். இவருடைய அண்ணன் கிருஷ்ணமூர்த்தி வெள்ளவேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கிருஷ்ணமூர்த்திக்கு அக்கா, தங்கை மற்றும் ஒரு தம்பி என மொத்தம் நான்கு பேர் உள்ளனர்.

அக்கா மற்றும் தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டோம் அதனால் அக்கா தங்கைக்கு சொத்து கொடுக்கக் கூடாது என்று உடன் பிறந்த தம்பி வடிவேலு அண்ணனிடம் சண்டை போட்டு உள்ளார்.

இந்நிலையில்
காவலர் கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் நாத்து நடுவதற்காக டிராக்டர் ஓட்டி செல்லும் பொழுது வடிவேலு என்பவர் தனது மகனிடம் செல்போனை கொடுத்துவிட்டு வீடியோ எடுக்கும்படி தெரிவித்துள்ளார் .

அண்ணன் ஓட்டி வந்த டிராக்டர் மீது ஓடி ஏறி கொலை செய்ய முயற்சி என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி உள்ளார்.

காவலர் கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் மனைவியை அண்ணி என்றும் பார்க்காமல்  வடிவேலு மற்றும் அவருடைய மனைவி மற்றும் மனைவியுடைய அக்கா மூன்று பேரும் சேர்ந்து காவலரின் தாய் மற்றும் மனைவியை அடித்தும்  தகாத வார்த்தைகளை பேசி மொத்த சொத்தையும் எனக்கு கொடுக்கவில்லை என்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் அழித்து விடுவேன் என்று கொலை மிரட்டலும் எடுத்துள்ளார் வடிவேலு.

இவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்திக்கு அவப்பெயர் ஏற்படுத்தி அவரது வேலை போக வேண்டும் என்ற நோக்கத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய வடிவேலு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனக்கு சொத்து முழுமையாக கிடைக்க வேண்டும் நற்பாசையில் ஒரு நல்ல மனிதரை பழிவாங்கும் துடிக்கும் இவர் ஒரு தம்பியா என ஊர் மக்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

Share this content:

Previous post

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் ” பணியிடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு ” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

Next post

விக்கிரவாண்டி அருகே கொத்தமங்கலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மனு

You May Have Missed