Loading Now

வேளாங்கண்ணி பேராலயம் அக்.3 முதல் நாள் முழுவதும் திறப்பு

நாகப்பட்டினம்: ​வேளாங்​கண்​ணி​யில் உள்ள புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​துக்கு தினமும் ஏராள​மானோர் வந்து வழிபட்​டுச் செல்​கின்​றனர். இதற்​காக தின​மும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பேரால​யம் திறந்து இருக்​கும். இதனால் இரவில் வேளாங்​கண்ணி வரும் பக்​தர்​கள் அங்​கேயே அறை எடுத்து தங்​கி​யிருந்து மறு​நாள் காலை​யில் மாதாவை தரிசிக்க வேண்​டியநிலை இருந்து வரு​கிறது.

இந்நிலை​யில் இதற்கு தீர்வு காணும் வகை​யில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாய​ராஜ் நேற்று வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், ‘‘வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யம் அக்​.3-ம் தேதி முதல் 24 மணி நேர​மும் திறந்​திருக்​கும். அன்​னை​யின் அருளைப் பெற வரும் பக்​தர்​கள் எந்த நேரத்​தி​லும் வழிபடும் வகை​யில் இந்த வரலாற்​றுச் சிறப்பு மிக்கமுடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது’’ என குறிப்​பிட்​டுள்​ளார். இந்த அறி​விப்​புக்கு வேளாங்​கண்ணி அன்​னை​யின் பக்​தர்​கள் மிகுந்த மகிழ்ச்​சி​யும், வரவேற்​பும் தெரி​வித்து வரு​கின்​றனர்.

Share this content:

You May Have Missed