Loading Now

மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்பம்: டிஎஸ்பி உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் காவல் மரண வழக்​கில் சிபிஐ கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் குற்​றம்​சாட்​டப்​பட்ட டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர், சார்பு ஆய்​வாளர், தலை​மை காவலரை சிறை​யில் அடைக்க மதுரை நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலா​ளி​யாக பணிபுரிந்​தவர் அஜித்​கு​மார் (27). கடந்த 2025 ஜூன் 27-ம் தேதி மடப்​புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்​பவர் அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்​தார். இப்​பு​காரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் அஜித்​கு​மாரை கோயிலுக்​குப் பின்​புறம் உள்ள மாட்​டுத்​தொழு​வத்​தில் கட்டி வைத்து தாக்​கிய​தில் அவர் உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பான வழக்கை சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வந்த நிலை​யில், இவ்​வழக்கு சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. தனிப்​படை காவலர்​கள் ராஜா, ஆனந்த், சங்​கரமணி​கண்​டன், பிரபு, கண்​ணன், ராமச்​சந்​திரன் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு, அனை​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

பின்​னர், சிபிஐ தாக்​கல் செய்த கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் மானாமதுரை டிஎஸ்பி சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவகு​மார், தலைமை காவலர் இளை​ய​ராஜா ஆகியோர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் கைதான தனிப்​படை காவலர்​கள் 6 பேர் மற்​றும் கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்ள டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேர் மீது மதுரை 5-வது கூடு​தல் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நீதிபதி தாமோதரன் முன்​னிலை​யில் நேற்று குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதற்​காக தனிப்​படை காவலர்​கள் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். மேலும், டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகினர். 10 பேர் மீதும் குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: இந்த வழக்​கில் கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் சேர்க்​கப்​பட்ட டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேரை காவலில் அடைக்​கக்​கூ​டாது என உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ள​தாக வழக்​கறிஞர்​கள் தெரி​வித்​தனர். இந்த உத்​தரவை அவர்​களுக்கு ஜாமீன் வழங்​கும் உத்​தர​வாகக் கருத முடி​யாது. இவர்​கள் மீது சுமத்​தப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் 7 ஆண்​டு​களுக்கு மேல் சிறைத் தண்​டனை விதிக்​கும் குற்​ற​மாகும்.

சிபிஐ தரப்​பில், டிஎஸ்பி மட்​டும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். காவல் ஆய்​வாளர் உள்​ளிட்ட 3 பேர் தற்​போதும் பணி​யில் உள்​ளனர். சம்​பவத்தை நேரில் கண்ட சாட்​சிக்​கான பாது​காப்பை தற்​போதைய காவல் ஆய்​வாளர் திரும்​பப் பெற்​றுள்​ளார். இதனால் டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேரை​யும் சிறை​யில் அடைத்​தால் மட்​டுமே விசா​ரணை நியாய​மாக நடை​பெறு​வதை உறுதி செய்ய முடி​யும். இதனால் வழக்கு முடி​யும் வரை 4 பேரை​யும் சிறை​யில் அடைக்க வேண்​டும்.

அரசு தரப்பு கூற்​றுப்​படி அனைத்து எதிரி​களும் சேர்ந்து அஜித்​கு​மாரை சட்​ட​விரோதமாக காவலில் எடுத்து தாக்கி சித்​ர​வதை செய்து மரணத்தை ஏற்​படுத்​தி​யதுடன், காவல் நிலைய அதி​காரப்​பூர்வ பதிவு​களில் பொய்​யான பதிவு​களை​யும், ஆவணங்​களை​யும் உரு​வாக்கி குற்​றத்தை மறைக்க முயன்​றுள்​ளனர். மேலும் உயி​ரிழந்​தவரின் பெற்​றோருடன் சமரசம் செய்​து​ கொள்ள உள்​ளூர் அரசி​யல் கட்சி உறுப்​பினர்​களின் உதவி​யுடன் டிஎஸ்பி முயன்​ற​தாக​வும் அரசு தரப்பு குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

தற்​போதைய சூழலில் டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேரும் சிறைக்​காவலுக்கு வெளியே இருப்​பது, சாட்​சிகளை கலைத்​தல், ஆதா​ரங்​களை சிதைத்​தல் போன்ற செயல்​களுக்கு வழி​வகுக்​கும் என்ற அச்​சம் உள்​ளது. எனவே, டிஎஸ்பி உள்​ளிட்ட 4 பேரை​யும் செப்​.16 வரை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

Share this content:

You May Have Missed