மேட்டூருக்கு நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக சரிந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 3,718 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,958 கனஅடியாகவும், மாலை 2,250 கனஅடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரும், கால்வாய் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 90.52 அடியாகவும், நீர் இருப்பு 53.24 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
இதற்கிடையே தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்றுமுன்தினம் காலை விநாடிக்கு 5,000 கன அடியாகப் பதிவான நீர்வரத்து, நேற்று காலை 6 மணியளவில் 3,000 கனஅடியாகக் குறைந்தது.