Loading Now

திருவண்ணாமலையில் வேத ஆகம–தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு

செப்டம்பர் 13, 14 – இரண்டு நாள் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (காஞ்சி காமகோடி பீடம்), ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜூயர் (ஸ்ரீவில்லிபுத்தூர்), ஸ்ரீ சக்தி அம்மா (ஸ்ரீநாராயணி பீடம் – ஸ்ரீபுரம், தங்க கோவில், வேலூர்), அருள்திரு செந்தில்குமார் அடிகளார் (மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்), ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் (ரத்தினகிரி), ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் (கலவை) உள்ளிட்ட மாபெரும் ஆன்மீக தலைவர்கள் தலைமையேற்கின்றனர்.

முதல் நாள் (செப். 13, சனி):
காலை தமிழகம் முழுவதிலும் இருந்து 1008 சிவாச்சாரியார்கள் பங்கேற்கும் மகா சிவபூஜை நடைபெறும். பிற்பகலில் ஆன்மீக ஊர்வலம், மாலை ஆன்மீக மகான்களின் அருளுரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் (செப். 14, ஞாயிறு):
காலையில் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். இதில் காஞ்சி மகா பெரியவா, ஜூயர் சுவாமிகள், தமிழக ஆதீனங்கள், சிவாச்சாரியார்கள், பல ஆன்மீக பெரியோர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர். பின்னர் சமூக பிரதிநிதிகள், தொண்டர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் கவுரவிப்பு நடைபெறும். மாலை இசை மேடை மீது இசை மாமன்னன் இளையராஜா மகன் கார்த்திக் ராஜா வழங்கும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும்.

உலக கலாச்சார ஒற்றுமை தினமாக செப்டம்பர் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இம்மாநாட்டை இளவரசு பட்டம் டாக்டர் பி. டி. ரமேஷ்குருக்கள், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் புரவலர் ஜெகதீஷ் கடவுள் தலைமையில் விழா குழுவினர் ஒருங்கிணைக்கின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed