தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி & BLA-2 ஆலோசனைக் கூட்டம் – முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

தாராபுரம் நகரில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் BLA-2 தேர்தல் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று வேல்முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்கவும், கழக தலைமை நிலைய செயலாளர், எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. எஸ். பி. வேலுமணி, MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.அதேபோல், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. சி. மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில், தாராபுரம் நகர கழக செயலாளர் திரு. C.R. எனப்படுபவர் C. ராஜேந்திரன், B.E. தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முகவர்களுக்கு தேர்தல் பணிப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.நிகழ்வில் மாவட்டக் கழக பொருளாளர் திரு சின்னப்பன் எனப்படும் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் திருமதி பானுமதி கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு கோகுல்ராஜ், குண்டடம் முன்னாள் சேர்மன் திரு குப்புசாமி, ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் திரு பங்க் பி. மகேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு கோல்டன்ராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் திரு அரசகுமாரன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஜாகிர் அப்பாஸ், நகர மகளிர் அணி செயலாளர் கௌரிசித்ரா முருகேசன், நகர அம்மா பேரவை செயலாளர் திரு கே.என். ராமசாமி, நகர இளைஞரணி செயலாளர் திரு தினேஷ்குமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு திலிப் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், நகர மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து கழக நிர்வாகிகள், கிளைக் கழக மற்றும் வார்டு கழக செயலாளர்கள், தாராபுரம் நகர அதிமுக உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



Post Comment