Loading Now

காக்கிநாடா மாவட்டத்தில் காலை அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் மோதியதில் நான்கு பக்தர்கள் உயிரிழந்தனர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், தென்கடா மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 40 பவானி பக்தர்கள் ஒரு தனியார் பேருந்தில் விஜயவாடாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுநர் காக்கிநாடா மாவட்டம் பிரதிபாடு தொகுதியில் உள்ள கத்திப்புடி என்ற இடத்தில் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார். தேநீர் அருந்துவதற்காகப் பேருந்திலிருந்து இறங்கிய பக்தர்கள் சாலையைக் கடக்கும்போது, ​​அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed