Loading Now

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் – அதிகாரிகள் ஆய்வு

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் ரூ. 4,800 கோடி மதிப்பில் புதிய கடல்நீரை ஆலை நன்னீராக்கும் அமைப்பதற்கான நிலம் தேர்வுசெய்யும்பணிகள்தீவி ரமடைந்துள்ளன.கடந்த செப்டம்பர் 2ம் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், மீஞ்சூரில் 400 எம்.எல்.டி. திறன் கொண்ட புதிய கடல் நீரை நன்னீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று அறி வித்திருந்தார். அந்தஅறிவிப்பின் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற் கொண்டனர்.இந்த புதிய ஆலை பயன் பாட்டிற்கு வரும் போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், ஆர்.கே. நகர். துறைமுகம், ராயபுரம். பெரம்பூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளுடனும், ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளைச்சேர்ந்த சுமார் 27 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது.தற்போது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 91 லட்சம் மக்களுக்கு ஏரிகள், நிலத்தடிநீர் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் ஆலைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1,260 எம்.எல்.டி. குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே நெம்மேலி யில் இயங்கி வரும் ஆலைகள்மூலம் தெற்கு சென்னை பகுதி பயன் பெற்று வரும் நிலையில், நெம்மேலி அருகே பேரூரில் மற்றொரு 400 எம்.எல்.டி. ஆலை கட்டப்பட்டு வருகிறது. இதனி டையே, மீஞ்சூரில் உள்ள பழைய 110 எம்.எல்.டி. ஆலையில் மீண்டும் உற்பத் தியைத்தொடங்குவதற்கான பணிகளையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உற்பத்தியைத் தொடங்க உத்தரவிட்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed