Loading Now

அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லமலா ஆனந்த். இவரது மகள் அக்‌ஷிதா (வயது 25), மகன் அக்‌ஷய் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்ட மேல்படிப்பு படித்து வந்தனர்.இதனிடையே, நியூயார்க்கின் அல்பெனி பகுதியில் இருவரும் தங்கி இருந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பட்ட மேல்படிப்பு படித்து வந்தனர்.மாரடைப்பால் மாணவி மரணம்இந்நிலையில், அக்‌ஷிதா நேற்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது சகோதரனுடன் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே உள்ள சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அக்‌ஷிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாலையில் மயங்கி விழுந்தார்.இதையடுத்து அவரை மீட்ட சகோதரன் அக்‌ஷய் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு அக்‌ஷிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, மாரடைப்பால் உயிரிழந்த அக்‌ஷிதாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

Share this content:

Post Comment

You May Have Missed