மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ்கோல், பிட்டுகோல் தம்பதியினர் தங்கி ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 3 வயது பெண் குழந்தை ராகினி, திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. உடனடியாக, பெற்றோர் தொழிற்சாலை பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது சுமார் 10 அடி ஆழமுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Comment