Loading Now

நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்..

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கையை, பகுத்தறிவு சிந்தனையை தூண்டும் வகையில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றது பொதுமக்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் எழுதிய நூல்கள் பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். திராவிடர் மாணவர் கழக பொறுப்பாளர் இரா.முகிலன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர் இந்த பரப்புரையை தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் திராவிடர் கழகத்தின் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை ஆர்வமுடன் வாங்கி படித்து அறிவுத் தெளிவுப் பெற்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed