Loading Now

நீட் ரத்து குறித்து பேரவையில் விரைவில் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி,

திருப்பூர்/ கோவை: நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தவெக நிலைப்பாடு. நீட் ரத்து குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தவிர சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்வோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இடம்தேர்வு குறித்து ஆலோசனை செய்துள்ளோம்” என்றார்.

முன்னதாக திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அமைச்​சர் ஆய்வு மேற்​கொண்​டார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நீட் தேர்வு முறை​கேடு​கள், ரத்து மற்​றும் மறு​தேர்வு போன்ற காரணங்​களால் மாணவர்​கள், அவர்​களது பெற்​றோர் மன உளைச்​சலுக்கு ஆளாகி​யுள்​ளனர் என்​பதை அரசு உணர்ந்​துள்​ளது. இதற்​காக தமிழக அரசு மனம் திட்​டத்​தின்​கீழ் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்​களைக் கொண்டு ஆலோ​சனை​களை வழங்கி வரு​கிறது. மாணவர்​கள் எவ்​வித தவறான முடிவு​களும் எடுக்க வேண்​டாம்.

ஏதேனும் மனஅழுத்​தம் இருந்​தால் 104 என்ற உதவி எண்​ணைத்தொடர்பு கொண்டு இலவச ஆலோ​சனை​களை பெற்​றுக்​கொள்​ளலாம். இந்த வசதியை மாணவர்​களின் பெற்​றோரும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். மாசுபட்ட மற்​றும் சுகா​தா​ரமற்ற உணவு​களை உட்​கொள்​வ​தால் ஏற்​படும் ‘ஷிகெல்​லா’ போன்ற நோய்​களைத் தடுக்க உணவு பாது​காப்​புத் ​துறை அதி​காரி​களுக்கு தீவிர அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகம் முழு​வதும் உள்ள உணவகங்​களில் தரம் மற்​றும் தூய்மை முறை​யாகப் பேணப்​படு​கிறதா என்​ப​தைக் கண்​காணிக்​க​வும், சுகா​தா​ர​மான முறை​யில் உணவு​கள் தயாரிக்​கப்​படு​வதை உறுதி செய்​ய​வும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ஆய்​வின்​போது, மாவட்ட ஆட்​சி​யர் மனிஷ் நாரணவரே, அரசு மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் (பொறுப்​பு) பத்​மினி உள்​ளிட்​ட பலர்​ உடனிருந்​தனர்​.

Share this content:

Previous post

குடியிருப்பு பகுதியில் சட்ட விரோத பார் உடன் இயங்கும் டாஸ்மாக் கடையால் பொது மக்கள் அவதி பலமுறை கடையை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மிகப்பெரிய போராட்டம் கையில் எடுப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை..

Next post

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து வழக்கு தொடர விவசாய சங்கங்கள் முடிவு,

Post Comment

You May Have Missed