Loading Now

திருப்பூரில் சாலையோரம் வீசப்பட்ட தக்காளி: காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளிச் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. தக்காளிப் பழங்களில் பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்கள் தாக்கி, அறுவடைக்கு வந்த காய்களும் பழங்களும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மழை இல்லாத காலங்களில் பறிக்கப்படும் தக்காளி பழங்கள் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனால், கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், நோய் தாக்கிப் பழங்கள் பறித்த 2 நாட்களில் அழுகிப் பாழாகிவிடுகின்றன. சந்தைக்கு வரும் தக்காளியின் தரத்திற்கு ஏற்ப விலையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. தரமான பந்தல் தக்காளி 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. ஆனால், மழையால் பாதிக்கப்பட்டுத் தரம் குறைந்த தக்காளிப் பெட்டிகள் ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. குமரலிங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட தக்காளி பழங்கள் பெரும்பாலும் அழுகியதால் அவற்றை வியாபாரிகள் யாரும் வாங்க முன்வருவதில்லை. இதனால் விவசாயிகள், அழுகிய தக்காளிகளை சந்தை வளாகங்களுக்கு வெளியிலும், சாலை ஓரங்களிலும் கொட்டி செல்லும் சோகமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

Share this content:

Post Comment

You May Have Missed