Loading Now

மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக புகார் – வார்டனை கன்னத்தில் அறைந்த தாய்

மாணவனை தவறான உறவுக்கு அழைத்ததாக மாணவனின் தாயார் வார்டனை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி வார்டன் ஒருவர் பணி செய்து வருகிறார். அவர் அருகிலுள்ள அரசினர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவரின் தாயார் விடுமுறை தினத்தில் விடுதிக்கு மகனை காண்பதற்கு வந்தார். அப்போது அந்த மாணவன் தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.இது குறித்து அவரின் தாயார் வார்டனை அழைத்து கேள்வி எழுப்பினார். பின்னர், ஆத்திரமடைந்த மாணவனின் தாயார் வார்டனை கன்னத்தில் அறைந்தார். இது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வார்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed