Loading Now

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை மீண்டும் 25 ந் தேதி கனமழை கொட்டும் வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னைக்கு வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் வி ஆர் துரை செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்று (21.10.2026) காலை 8. 30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 26ஆம் தேதி வரை, தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மற்றொரு குறைந்த காற்றழுத்தப் பகுதி, வரும் அக்டோபர் 23ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளது. பின்னர், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தப் பகுதி நிலவி வருகிறது. இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், சோமாலியா கடற்கரையை நோக்கி மேற்கு-தென்மேற்கு திசையில் நகரக்கூடும்.வடகிழக்குப் பருவமழைவடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து, பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், ஈரோடு மற்றும் விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகப்பட்டசமாக 15.4 சென்டி மீட்டர் அளவுக்கு சென்னை எம்ஜிஆர் நகரில் மழை பதிவாகியுள்ளதுகடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம், எம்.ஜி.ஆர். நகரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி , தென்காசி ,. கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை நாளை பெய்யக்கூடும்.கன மழையைப் பொறுத்தவரை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, மற்றும் ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைவாக உள்ளது.எனவே சிவப்பு நிற எச்சரிக்கை கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனாலும் மிக கனமழை தொடர்ந்து பெய்யும் போது, மூன்றாவது நாள் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் மாதத்தை பொறுத்தவரை தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னைக்கு வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு கடலோரப் அவர்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் கொடுக்கிறோம்.. அரபிக் கடல் பகுதியில் கடற்கரை மேற்பரப்பில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது வட கிழக்கு காற்றும் அதிகமாக இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அதிகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். கடந்த 17 ஆம் தேதி இயல்பை விட அதிகமாக அதிக கன மழை பெய்தது. முதல் நாள் அதி கனமழை பெய்யும் போது , அடுத்த நாள் கனமழை பெய்யும் என்பதால் நிர்வாக ரீதியாக சிவப்பு நிற எச்சரிக்கை கொடுப்போம். ஆனால் வட தமிழக பகுதிகளில் உருவான சுழற்சி வலு குறைந்ததால் மழை 18 ந் தேதி மழை பெய்யவில்லை. தென் தமிழகத்தின் பகுதிகளில் இன்று இரவிலிருந்து மழை பெய்யும். வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநகராட்சி மழை மானி கணிப்புகள் வேறுபடும் நிலையில் அதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளோம். தொழில்நுட்பக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர் மழைமானிகளை ஆய்வு செய்து அது சரியான கணிப்பா இல்லையா என்று தெரிவிக்கட்டும் என கூறினார்.

Share this content:

Post Comment

You May Have Missed