Loading Now

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 4-வது நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை மற்றும் காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், சுருளி அருவியில் நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது.
கடந்த சில நாட்களாக மேகமலைப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கம்பம் மேற்கு வனச்சரக வனத்துறையினர் அருவியில் குளிப்பதற்குத் தடை விதித்தனர்.

Share this content:

Previous post

பிரான்சில் வன்முறை எதிரொலி: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை

Next post

போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் SSI திரு ரஞ்சன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Post Comment

You May Have Missed