சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று (25.06.2026) நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ்.வி.என். கல்லூரியில் மாபெரும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுமார் 500 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பேரணியை தென் மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன், ஐ.பி.எஸ்., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.முன்னதாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரகுமார் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியை மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலால் துணை ஆணையர், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. கர்ணன், எஸ்.வி.என். கல்லூரி பேராசிரியர் திருமதி சுப. விவேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.பேரணியில் ரெட் கிராஸ் சொசைட்டி, எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, சேர்மத்தாய் மகளிர் கல்லூரி, லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ. (CBSE) பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.



Post Comment