Loading Now

சிலம்பம் சுழற்றி கொண்டே 60 வினாடிகளில் அதிக சுருக்கெழுத்துகளை கூறி உலக சாதனை படைத்த சிறுவன்!

சேலம் மாவட்டம், ‘ஜாகீர் அம்மாபாளையம்’ எட்டிக்குட்டி தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் – சௌந்தர்யா தம்பதியினரின் மகன் மாஸ்டர் H. யோஹன், முழங்கால் நிலையில் முட்டிபோட்டுக் கொண்டே சிலம்பம் சுழற்றி 60 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான சுருக்கெழுத்துகளை (Abbreviations) கூறி உலகின் முதல் சாதனையை படைத்துள்ளார்.இச்சாதனை அவரது அசாதாரண திறமை, அபார கவனத்திறன், ஒருங்கிணைப்பு திறன், ஒழுக்கம் மற்றும் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிக இளம் வயதிலேயே கடின உழைப்பு, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் மூலம் இந்த மகத்தான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.இந்த உலக சாதனையை Lincoln Book of Records அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, 02 ஜனவரி 2026 அன்று சாதனையாக பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜோசப் இளந்தென்றல் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கி மாஸ்டர் H. யோஹனை கவுரவித்தார்.இச்சாதனை சேலம் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

Share this content:

Post Comment

You May Have Missed