அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அச்சிறுபாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0, “எனது குப்பை – எனது பொறுப்பு” மற்றும் திடக்கழிவு திட்ட விதிகள் 2026-ன் கீழ், பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின்படி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என்றும், கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தூய்மையான நகர்ப்புறச் சூழலையும் ஏற்படுத்த முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ந. லதா தலைமை வகித்தார். இதில் துப்புரவு மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Post Comment