Loading Now
அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் 72-வது ஆண்டு பொது பேரவை மற்றும் நூற்றாண்டு விழா

அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் 72-வது ஆண்டு பொது பேரவை மற்றும் நூற்றாண்டு விழா

புதுடெல்லி: அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் (AICU) 72-வது ஆண்டு பொது பேரவை கூட்டம் மற்றும் நூற்றாண்டு விழா புதுடெல்லி ஓக்லாவில் உள்ள டான் பாஸ்கோ மாகாண இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், தேசத்தை கட்டமைப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு AICU நூற்றாண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

சமூக நலன் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக சிறப்பாக பணியாற்றி வரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. பத்தியாவரம் அன்புதாஸ் அவர்களுக்கு, AICU சார்பில் அங்கீகார விருது (Recognition Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை ஓய்வுபெற்ற சிம்லா–சண்டிகர் மறைமாவட்ட ஆயர் மேதகு. இக்னேஷியஸ் மஸ்கரென்ஹாஸ் மற்றும் AICU தேசிய நிர்வாகிகள் முன்னிலையில், AICU தேசிய தலைவர் திரு. எலியாஸ் ரோட்னி வாஸ் வழங்கினார். இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவில் சமூக சேவை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆற்றப்பட்ட பங்களிப்புகள் பாராட்டப்பட்டன.

Share this content:

You May Have Missed