Loading Now
நியூசீனோ’ வலிப்பு தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய அல்கெம்

நியூசீனோ’ வலிப்பு தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய அல்கெம்

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம், வயதுவந்தோருக்கு ஏற்படும் பகுதியளவில் தொடங்கும் வலிப்பு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘நியூசீனோ’ (Cenobamate) என்ற புதிய வலிப்பு தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் செனோபமேட், வலிப்பு நோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. தினமும் ஒருமுறை வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நியூசீனோ, 12.5, 25, 50, 100, 150 மற்றும் 200 மில்லிகிராம் அளவுகளில் மாத்திரைகளாகக் கிடைக்கிறது .

நியூசீனோ மருந்து இரண்டு விதமான செயல்முறைகளின் மூலம் செயல்படுகிறது.

இந்த அறிமுகம் குறித்து அல்கெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் சிங், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து சவால்கள் நிலவுவதாகவும், செனோபமேட் சிறந்த சிகிச்சை முடிவுகளை வழங்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

Share this content:

You May Have Missed