Loading Now

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தூய்மைப்பணி நிகழ்வு ( ஸ்வெட்ச் பாரத் நிகழ்வு)

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் தூய்மைப்பணி நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வினை மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.முத்தையா அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.டீன் கண்ணதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.பல்கலைக் கழக இன்ஜினியரிங் பிரிவு தலைவர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.இந்த மாபெரும் நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அன்னை பாத்திமா கல்லூரி அருளானந்தர் கல்லூரி மன்னர் கல்லூரி விவேகானந்தா கல்லூரி தினமலர் SLCS கல்லூரியைச் சார்ந்த 400 மாணவர்களும் அந்தந்த கல்லூரியைச் சார்ந்த திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.பல்கலைக் கழக வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தரம் பிரித்து மாலையில் பதிவாளர் அவர்கள் முன்னிலையில் பல்கலைக் கழக தூய்மைப் பணியாளர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். மோ.பாண்டி அவர்கள் செய்திருந்தார்.அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் திட்ட அலுவலர் முனைவர். போ.முனியாண்டி அவர்கள் மாணவர்களை வழி நடத்தினார்.

Share this content:

Previous post

WWF–ICNW கூட்டமைப்புகளின் ஆதரவுடன் சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம்

Next post

தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்த, Protiviti (இந்தியப் பிரிவு), PSG iTech மற்றும் InsightVerge Technologies ஆகியவை இணைந்து ‘AI சிறப்பு மையத்தை’ தொடங்குகின்றன.

Post Comment

You May Have Missed