Loading Now

போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் SSI திரு ரஞ்சன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவை, அக்.23: சாலைப் பாதுகாப்பு,

தலைக்கவசம், கைபேசி, இருக்கைப்பட்டை, போக்குவரத்து விதிகன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் நிலைய ஆட்டோ ஒட்டுநர் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி எஸ்.எஸ் ஜ பி3 திரு ரஞ்சன் தலைமையில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவது அலட்சியமும், போதிய விழிப்புணர்வு இல்லாமையும்தான் காரணம். தலைக்கவசம் அணிவது உயிரைக் காக்கும். கைப்பேசியில் பேசவதும், மெசேஜ் அனுப்புவதும் கவனச்சிதறலை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இருக்கைப்பட்டை அணிவது பாதுகாப்பை உறுதி செய்யும். அனைத்து ஒட்டுநர்களும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

முக்கிய விழிப்புணர்வு அம்சங்கள்

தலைக்கவசம் அணிவது உயிரைக் காக்கும்.

கைபேசியில் பேச வேண்டாம்.

இருக்கைப்பட்டை கட்டாயம் அணியுங்கள்.

போக்குவரத்து விதிகளை மதிக்கவும்.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான வாழ்க்கை.

ஒட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசலாங்களை வழங்கினார

நிகழ்ச்சியில் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed