Loading Now

புதுகும்மிடிப்பூண்டியில் தவெக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்- முதல்வரை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து வர பெண்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டியில் தவெக மருத்துவ அணி சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், தவெக மாவட்ட செயலாளருமான எஸ்.விஜயகுமார் வடகிழக்கு பருவ மழையை ஒட்டி மழை அதிகமாக பெய்துள்ள இடங்களில் மருத்துவ முகாமை நடத்த தவெக மருத்துவ அணிக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தவெக மாவட்ட மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சாம்ராஜ், மாவட்ட நிர்வாகி சங்கமி ஏற்பாட்டில் புதுகும்மிடிப்பூண்டியில் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த முகாமிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் இருந்து 20பேர் கொண்ட மருத்துவகுழுவினர் பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகளை நடத்தி, இலவச சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை வழங்கினர்.

இந்த முகாமில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், பருவமழைக்காலம் முடியும் வரை தவெக சார்பில் இது போன்ற மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றவர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அனைத்து பிரச்சனைகளும் தவெக ஆட்சி அமைந்து 5 மாதங்களுக்குள் கண்டறியப்பட்டு, படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் இணைய வழியில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவதாகவும் கூறியவர், கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் புது கும்மிடிப்பூண்டி பகுதிக்கு பேருந்து சேவை, தொடர்ச்சியாக 100 நாள் வேலை ஆகியவற்றை செய்து தர கேட்டவர்கள் கும்மிடிப்பூண்டிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜயை வரவழைத்து அவரை தாங்கள் காண ஏற்பாடு செய்ய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாருக்கு நூதன கோரிக்கை வைத்தனர்.

முகாமில் தவெக மாவட்ட பொருளாளர் ஜி.கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புமலர், அருண், அசோகன், ஜோதிபிரகாசம், நகர செயலாளர் பழனி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இர்ஷாத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வி.எம்.எஸ்.சீனிவாசன், தவெக நிர்வாகி என்.எஸ்.ஆர்.நிஜாம், எம்.எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த இலவச பொது மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Share this content:

Previous post

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கே பி ராஜி – யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா இலவச உணவகம் திறப்பு விழா

Next post

எண்ணூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை

Post Comment

You May Have Missed