Loading Now

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான காலாண்​டுத் தேர்வு செப்​.16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடை​பெறுகிறது. அதன்​பிறகு, விடு​முறை விடப்​பட்​டு, அக்​.6-ம் தேதி பள்​ளி​கள் திறக்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு விவரம்: தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தைப் பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான காலாண்டு தேர்​வுக்​கால அட்​ட​வணை தற்​போது வெளி​யிடப்​படு​கிறது. அதன்​படி, 1 முதல் 10-ம் வகுப்​பு​களுக்கு செப்​.16 முதல் 24-ம் தேதி வரை​யும், 11, 12-ம் வகுப்​பு​களுக்கு செப்​.16 முதல் 25-ம் தேதி வரை​யும் தேர்வு நடை​பெறும். பாட​வாரி​யான கால அட்​ட​வணை பள்​ளி​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன.

6, 8-ம் வகுப்​பு​கள், பொதுத் தேர்வை எதிர் கொள்​ளும் 10, 12-ம் வகுப்​பு​களுக்கு காலை​யிலும், 7, 9, 11-ம் வகுப்​பு களுக்கு மதி​ய​மும் தேர்​வுகள் நடை​பெறும். மாணவர்களுக்கு செப்​.26 முதல் அக்​.5-ம் தேதி வரை விடு​முறை வழங்​கப்​படும். விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​.6-ம் தேதி திறக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

வினாத்​தாள் பதி​விறக்​கம்: காலாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​களை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களும் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அதன்​படி 1 முதல் 5-ம் வகுப்​பு​களுக்​கான வினாத்​தாளை எமிஸ் தளத்​தில் மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்ய வேண்​டும். 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்​கான வினாத்​தாளை https://exam.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து அச்​சிட்​டுக் கொள்ள வேண்​டும்.

முன்​கூட்​டியே வழங்​கப்​படும் வினாத்​தாள்​களை தலைமை ஆசிரியர்​கள் மிக​வும் பாது​காப்​பாக வைத்​திருந்​து, உரிய தேர்வு நாளில் மட்​டுமே அந்​தந்த பாடத்​துக்​கான வினாத்​தாளைப் பயன்​படுத்த வேண்​டும். வினாத்​தாள் பதி​விறக்​கம், அச்​சிடு​வ​தில் தொழில்​நுட்​பச் சிக்​கல்​கள் ஏற்​பட்​டால் ‘14417’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்​ளலாம்.

Share this content:

Previous post

பாடல் பதிப்புரிமை உத்தரவை மீறியதாக மனு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Next post

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

You May Have Missed