Loading Now

நுகர்வோரே வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி – மின்சார வாரியம் அதிரடி திட்டம்

நுகர்வோரே தங்கள் வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலிஅதன்படி, மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியில் ‘சுய கணக்கீடு’ என்ற புதிய வசதி சேர்க்கப்பட உள்ளது. நுகர்வோர்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள அளவீட்டை செயலி மூலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தால், மென்பொருள் தானாகவே இரு மாதத்திற்கான மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டண பட்டியலை உருவாக்கும்a.இந்த கட்டண விவரம் நுகர்வோரின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.முதற்கட்டமாக இன்னும் இரு வாரங்களில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் இந்த வசதி சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் மின் கணக்கீடு தாமதமாவது மற்றும் தவறான கட்டணம் விதிக்கப்படுவது போன்ற புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே நுகர்வோர் பல மின் இணைப்புகளுக்கான அளவீடுகளையும் இந்த செயலி மூலம் பதிவேற்றம் செய்ய முடியும்.மின்சார வாரிய செயலியை திறந்து, ‘சுயகணக்கீடு’ என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மின் இணைப்பு எண்ணை உள்ளீடு செய்து மீட்டரில் உள்ள அளவீடு தெரியுமாறு செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும். அதை சமர்ப்பித்தவுடன் முந்தைய அளவீட்டுடன் ஒப்பிட்டு புதிய கட்டண பட்டியல் உருவாக்கப்பட்டு செல்போனுக்கு அனுப்பப்படும்.நுகர்வோர்கள் இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ செலுத்தலாம். வழக்கத்தை விட கட்டண தொகை அதிக வேறுபாடு இருந்தால் அது குறித்து மின் கணக்கீட்டாளர்கள் நேரடியாக வந்து மீண்டும் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed